Tuesday, January 5, 2010

பிரபஞ்சம்

அனாதை பிணமொன்று
அன்று காலையில்தான்
புதைக்கப்பட்டிருக்கவேண்டும்
தூவிய மலர்களுக்கு
இன்னும் மரணம்
விதிக்கபட்டிருக்கவில்லை
சடலக்குழிகளுக்குள்
வளர்க்கின்றது
தலைமுறையை
உடன் சில புற்களும்

12 comments:

hiuhiuw said...

அனாதை பிணமொன்று
அன்று காலையில்தான்
புதைக்கப்பட்டிருக்கவேண்டும்
தூவிய மலர்களுக்கு
இன்னும் மரணம்
விதிக்கபட்டிருக்கவில்லை
சடலக்குழிகளுக்குள்
வளர்க்கின்றது
தலைமுறையை
உடன் சில புற்களும்//

தொடர்ந்து எழுதுங்கள் . மிக அழகாக இருக்கிறது.

அன்பின் ராஜன்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு.

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க, தொடர்ந்து எழுதுங்கள்.

sathishsangkavi.blogspot.com said...

அழகான வரிகள்...

Ganesh Gopalasubramanian said...

// உடன் சில புற்களும்
பழமொழியை நல்ல மொழிக் குறியீடாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்! இந்த வரி இல்லாமல் இருந்திருந்தால் மனிதனின் நம்பிக்கையைப் பற்றியதொரு தளத்தில் இயங்குவதற்கான சாத்தியமும் கவிதைக்கு இருந்திருக்கும்.

// தூவிய மலர்களுக்கு இன்னும் மரணம்
நீங்கள் நினைக்கும் வாசிப்பு சாத்தியம் என்றாலும் அனாதை பிணத்துக்காகத் தூவப்பட்ட மலர்கள் என்பது எப்போதும் நிகழக்கூடியதென்று தோன்றவில்லை. அனாதை பிணமென்றவுடன் கார்ப்பரேஷன் லாரி படிமமாவதைத் தவிர்க்க முடியவில்லை. ”அனாதைப் பிணமென்னும்” சொல்லாடல் கண்டிப்பாக தேவையா என்ன? பிணமென்று மட்டும் குறித்திருந்தால் இந்த அதிகப்படியான பளுவை வாசகன் முதுகில் ஏற்றாமல் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி உங்கள் கவித்துவத்தை ரசித்தேன்.

பாலா said...

நல்லாதாங்க இருக்கு

நட்புடன் ஜமால் said...

தூவிய மலர்களுக்கு
இன்னும் மரணம்
விதிக்கபட்டிருக்கவில்லை]]


நல்ல சொல்லாடல் ...

வால்பையன் said...

இதை தான் எதிர்பார்க்கிறேன்!
எப்போதும் காதல் கவிதைகளையே எழுதாமால் இம்மாதிரி மாற்றி யோசிப்பது தான் கவிதையை அடுத்த கட்டத்துக்கு நகர்றும்!

chandru / RVC said...

நல்லாயிருக்குங்க. தொடர்ந்து எழுதுங்கள்

சிவக்குமரன் said...

good one. keep doing.

கமலேஷ் said...

மிகவும் அழாகான கவிதை...வாழ்த்துக்கள்...

முனைவர் இரா.குணசீலன் said...

தூவிய மலர்களுக்கு
இன்னும் மரணம்
விதிக்கபட்டிருக்கவில்லை//

நன்று!!!!!

கவிதை நன்றாகவுள்ளது!!