Monday, September 17, 2012

தொலைவு




ஏதுமற்ற சமரசங்களில்
தொலையாத நிராசைகள்
ரகசியமாய் பதுங்கியது
சுவாசத்தினூடாய்
விலகும்  வழியற்று
சமநிலைகள்
தள்ளி சென்ற 
நீர்க்குமிழிகள்
உடையாது ஒன்றை ஒன்று  புணர்ந்து
கொண்டு  காற்றை
சிதறடித்த  .
சந்தர்ப்பங்களை
மறந்திருந்த  புன்னகைகள்
துயரங்களின் தழும்புகளால்
கீறப்பட்டப்பட்ட பற்களில்
மெல்ல தன்னை குறுக்கி
தேம்பிகொள்கிறது.
விட்டகலாத ஒற்றை முத்தம்கூட
காலத்தை  கடத்தி செல்லும் முள்ளாகும் 





Tuesday, September 11, 2012

துயிலுற்ற மௌனம்





துழாவிக்களைத்த  நீர் அலைகள்
அமைதியிழந்து  தழைக்கிறது
அத்துமீறி என்  தோட்டத்து வேரில்
இழைய தொடரும் காலமெனினும்
துரதிர்ஷ்ட சொல்லொன்றுக்கு கீழ்
முளைத்து நெளிந்த  பாம்பின் கால்கள்..
அனுமதிக்கப்பட்ட பரமபதத்தை 

வழிமறித்து. தனித்து நிற்கிறது
சுருக்கமற்ற நமது பிரியங்கள்
யாருமற்றதாய் புலம்பும் இன்மைகள்
பேரளவானதொரு தூரத்தை 

நெருங்குகிறது
அண்மையில்   இருப்பதறியாது