Saturday, February 27, 2010

பிரகடனத்தூரிகைகள்

தவறவிட்டிருந்த
உன்னதமானதொரு
காதல்
வந்த பாதையறியாது
சுழல்கிறது
அவனிடமிருந்து அவளுக்கும்
அவளிடமிருந்து அவனுக்கும்
தனித்த தூரிகையின்
ஓவியப்பிரகடனத்தை
புரிபடாது

பிளவுபட்டிருந்த
சுவற்றுக்குள்
பல்லாயிரக்கணக்கான
எறும்புகள்
தன்தீனிக்காதலை
சுமந்து
அந்தரவெளியில்
அலைந்து தனதேயான
இணைத்தேடி
பிடிக்கின்றது

காமம் தணித்த
எறும்புகளில் சில
தாங்கொணாத்துயரத்தில்
அவனும்
அவளுமாய்
திரும்புகின்றது அள்ளப்பெறாத
காதலோடு

4 comments:

Ashok D said...

:)

உயிரோடை said...

//தனித்த தூரிகையின்
ஓவியப்பிரகடனத்தை//

அழகு வரிகள்.

கவிதை நல்லா இருக்குங்க யாழினி.

அகநாழிகை said...

கவிதை அருமை யாழினி.

டவுசர் பாண்டி... said...

”இணைத்தேடி” யா இல்லை இணையைத் தேடி...யா?

எது சரி?