Monday, March 22, 2010

வெளிப்படுகை

தயையற்ற நரம்புகளில்
பயணப்படத் தொடங்கியது
விழுந்து வேர்கொண்டெழுந்த மழை;
அமைதியற்ற நிலையில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
சிந்தியவை
கவியும் மௌனவெளியில்
உடலிழந்த நிர்வாணத்தில்
மடிப்பு கலையாத ஆடையாகி
அந்தப் பொழுதின் அந்திமத்திற்காய்
காத்துக்கிடக்கையில்
கருவுற்றிருந்தேன்
புடைத்த வயிறு தடவுகையில்
விரல்களில் ஒட்டிக்கொண்ட
துளிகளில் சில
வசீகரம் நிறைந்த
பின்னிரவுகளின்
பூரணம் நிலவாகிக் கொண்டிருப்பதை
குறைகூறி
விழுங்கிய காமத்தை
உமிழச்சொன்னது
மார்புகளில் ஒற்றிக்கொண்டிருக்கும்
வெள்ளைக்குருதி சட்டென
மூத்திரமாய்
ஒற்றை துளி வடிய
சாதுர்யமாய்
உறைந்துவிட்ட உயிரொன்று
அன்னியப்பட்டு
கரை ஒதுங்குகிறது.

============

(இம்மாத அகநாழிகையில் எனது கவிதையைப் பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு நன்றிகள்.)

6 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் யாழினி.

டவுசர் பாண்டி... said...

எப்படி இப்படீல்லாம் எழுதறீங்க....?

ரூம் போட்டு யோசிப்பீங்களா?

சத்தியமா புரியலை ஆத்தா!

:((

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்களும்....

உயிரோடை said...

வாழ்த்துகள் யாழினி

Anonymous said...

வாழ்த்துகள் :-)

வால்பையன் said...

ஏம்பா ரெண்டு மாசமா ஒன்னுமே எழுதுல!?