துயர்க்கூடி
முதிர்ந்திருந்த
இரவின் வேர்த்தேடி
பயணித்திருந்த இலைகள்;
துழாவி தூர்க்கவியலாது
நிலமெங்கும் வியாபித்திருந்த
நரம்புகளைக்கொண்டு
சிவப்பாலும்
பச்சையாலும்
சுயாதீனமாய்
உயிர்க்கவற்ற விளக்குகளில்
சுருண்டுடையவிருக்கும்
ஒளிக்கு வண்ணமீட்டுகிறது.
வேறொருவருக்கும் உதவாத
வெற்று வெளிச்சங்களின்
அசூயைக்கொண்டு
கருகிய இலைகள்
வெகுநேரம் கூவியும்
வெளிவராத
வீட்டுடைமைகளை
சலித்த யாசகனாய்
வஞ்சனைகளின் பிரதிபலிப்புகளில்
தன்னை இறுக்கி
இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது
மரம்.
10 comments:
//தன்னை இறுக்கி இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது மரம்.//
அருமையான கவிதை யாழினி.. ரொம்பப் பிடிச்சிருக்கு.
my tamil is not good enough to understand this :-(
முதல் சில வரிகளிலேயே நீங்கள் அசத்தி விட்டீர்கள்.
கார்த்திக்.
புதிய தொடர் என் வலை பூவில். படியுங்கள். கருத்தை பகிருங்கள்.
http://eluthuvathukarthick.wordpress.com/
மீண்டுமொரு நல்ல கவிதை...
//தன்னை இறுக்கி இலை சேர்த்துக்கொண்டிருக்கின்றது மரம்.//
அருமையான கவிதை யாழினி.. ரொம்பப் பிடிச்சிருக்கு.
//
அதே!!!
கவிதை அருமை
//my tamil is not good enough to understand this :-(//
இக்கவிதை புரிகின்ற அளவிற்கு எனது தமிழ் கல்வி இல்லை என்பதன் ஆங்கில வடிவமாக்கி புனிதாக்கா சொல்லியிருக்காங்க! - அதைத்தான் நானும் சொல்றேன்! :)
இப்ப தான் படிச்சேன், நல்லா இருக்கு யாழினி, ரொம்ப ஆழமான மொழி.
யாழினி தோட்டத்தில் பசுமைக்கு பஞ்சமில்லை வாழ்த்துக்கள் :)
ஆயில்யன் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்:)
Post a Comment