ஒற்றைபட்டு சாய்ந்த
நிழலின் நிலமெங்கும்
இருட்டுக்குமொப்பாத
சாம்பல் நிற
மண்ணினாலான பூமி
கவிழ்ந்திருந்த முகத்தை
கிளைத்து
பசிக்கு துழாவி
கொத்தத்தொடங்குகிறது சேவல்
அரூபங்களின் துயர் தீராபொழுதில்
சொற்ப வார்த்தைகளை
கொண்டொரு பிரயாணங்களின்
மீந்து நின்ற கவிதைகளில்
சில பரிவில்லாது
தொண்டைக்குள் அடைபடுகிறது
சுவடுகளை அழித்திருந்த காற்றுதான்
என்னையும் இல்லாதாக்குகிறது.
அணைத்த மெழுகின்
அவஸ்தை விளம்பித்திரிகையில்தான்
அறிந்திருந்தது அதனின் ரூபமும்
3 comments:
//சாரங்களின் நிசப்தம்//
என்ன ஒரு கவித்துவமான சொற்ச்சேர்க்கை
//பசிக்கு துழாவி
கொத்தத்தொடங்குகிறது சேவல்//
//அரூபங்களின் துயர் தீராபொழுதில்//
//சுவடுகளை அழித்திருந்த காற்றுதான்
என்னையும் இல்லாதாக்குகிறது.//
//அணைத்த மெழுகின்
அவஸ்தை விளம்பித்திரிகையில்தான்
அறிந்திருந்தது அதனின் ரூபமும்//
ரொம்ப நல்லா இருக்கு யாழினி
இந்தக் கவிதையில் உறைந்திருக்கும் நிசப்தத்தின் சாரமும் அல்லது சாரங்களின் நிசப்தமும்,,,,,
>நிழலின் நிலமெங்கும்
>இருட்டுக்குமொப்பாத
>சாம்பல் நிற
>மண்ணினாலான பூமி
>சேவல்!!
விஷயம் பகீரென்கிறது...
>மீந்து நின்ற கவிதைகளில்
>தொண்டைக்குள் அடைபடுகிறது
>என்னையும் இல்லாதாக்குகிறது
>அணைத்த மெழுகின்
>அவஸ்தை விளம்பித்திரிகையில்தான்
>அறிந்திருந்தது அதனின் ரூபமும்
நிசப்தம்! வேரொன்றும் சொல்லத் தெரியவில்லை!!
நல்லா இருக்கு ப்பா..யாழினி
Post a Comment