Wednesday, June 30, 2010

குமிழ்ச்சரங்கள்


குரல்வளை அறுத்து
கசியத்தொடங்கியிருந்த
வலியென்பதன்
பெயர் உயிர்
கனன்ற துயரறியாத
திரிதலில் பொதிந்திருந்த
கழிப்பறைக்குள்
கண்ணீரின்
சேகரிப்பும்
சில துளிகளின்
சுத்தீகரிப்பும்
விதைகளற்ற
வெளியெங்கும்
வெள்ளம் பாய்ந்திருக்க
நாகுழறிய
மண்
மண்ணல்ல
மரமோ
செடியோ
முள்ளோ
முடிவில்லாது.

3 comments:

சென்ஷி said...

அருமையா இருக்குது!

Ganesh Gopalasubramanian said...

”விதைகளற்ற
வெளியெங்கும்
வெள்ளம் பாய்ந்திருக்க”

என்னும் வரிகளை
“கண்ணீரின்
சேகரிப்பும்
சில துளிகளின்
சுத்தீகரிப்பும்”

சேர்த்து படிக்கையில் ”பாய்ந்திருக்க” என்பது “பாய்த்திருக்க” என வரவேண்டுமோ?

அவ்வரிகளைத் தனித்து படிக்க வேண்டுமெனில் பத்தி பிரித்திருக்கலாம்.

வழக்கமான உங்கள் கவிதைகளில் இருக்கும் கற்பனையை விட இதில் அவ்வளம் குறைவு.

"நாகுழறிய
மண்
மண்ணல்ல"

அருமை!

யாத்ரா said...

nalla irukku yaazini,

puthaga paarvaium. naanum antha puthagathai padithu irukkiren.