Sunday, August 7, 2011

கேள்வி பதில்

ஈசலின் இறகை பற்றித்திரிந்த வெளிச்சத்தில் இன்னும் அடையாளம் காணவியலாத ஓவியங்கள் பலவுண்டு .
வயதுகளை பயணித்த சம்பவங்களும் அதைப்போலவேதான்.நீளப்பட்ட கிளை முறித்தும் முளைத்தும் காலத்திற்க்கேற்ப கடந்து வந்தாயிற்று. செல்ல வேண்டிய தூரங்கள் இன்னும் இருப்பினும் அல்லது இறப்பினும் தங்கிவிட்ட நினைவுகளின் சாயலை யாராலும் மறக்கவியல்வது சற்று கடினம்தான்.
புள்ளிகளால் அடுக்கப்பட்ட அவ்வெண்ணங்களை பகிர முத்துக்கா அழைத்திருக்கிறார். அழைத்தமைக்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நீங்கள் வி
ரும்பும் மூன்று விஷயங்கள் ?
சின்னசிறு மழலைக்கு
பெரிய சட்டை அணிந்து பார்ப்பது.
எதிர்பாராத மழையில் நனையும் மரம் .. சாலை,, மனிதர்கள்
கவிதைகளை கணவரோடு பகிர்வது
நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள் ?
தண்டன எனப்படும் மன்னிப்பு

எனது ஞாபகமறதி
புறம் பேசுதல்
பயப்படும் மூன்று விஷயங்கள் ?
தனிமை.
இரவு
சாலைக்கடப்பது.
உங்களுக்கு புரியாத மூன்று விஷயம் ?
வழிபாடு
அரசியல்
இன்னும் முளைக்கின்ற சாமியார்கள்

உங்கள் மேஜையில் இருக்கும் மூன்று விஷயங்கள்?
லாப்டப்
கைப்பேசி
கொஞ்சம் தூசி
உங்களை சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள் ?
பத்தாம் வகுப்பு காதல்
நகைச்சுவை
குழந்தையின் பொய்

தாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் காரியம் ?
அலுவலக பணியில்லாதிருப்பது
சமையல் கற்று கொள்ளவது
புதிய மொழி கற்று கொள்வது
நிறைய தூங்குவது. :) ஒண்ணு ஜாஸ்தி

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள் ?
என் மரண செய்தி கேட்டு வருந்த சில கண்களின் துளி
பிடித்தமானவரின் அருகாமை
குழந்தைகளின் வாழ்விற்கான பாதுகாப்பு.

உங்களால் செய்யது முடிக்கவேண்டிய விஷயங்கள்?
எழுத நினைப்பதை செயல்படுத்துவது
கேட்க்க விரும்பாத மூன்று விஷயங்கள்
சீரியல் கதை
அவசர ஊர்தியின் அழுகை
விபத்து
கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள் ?
புதிய மொழி
சமையல்
குழந்தை கதைகள்.

பிடித்த மூன்று உணவு ?
இட்லி
பொங்கல்
சாம்பார் வடை
அடிக்கடி முனுமுக்கும் பாடல் ?
தவமின்றி கிடைத்த வரமே...
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
கதைகளை பேசும் விழி அருகே

பிடித்த மூன்று படங்கள்
(malayaalam) நீலத்தாமரை
சதி லீலாவதி
தில்லுமுல்லு.
இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயங்கள் ?
அப்படி எதுவும் இல்லை ஒவ்வொரு சூழலும் வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தை சொல்கிறது
எது இல்லையாகினும் வாழ்தல் அவசியமாகிறது.

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி யாழினி ..அழகா எழுதி இருக்கே..

ம்..தண்டனை எனப்படும் மன்னிப்பு ..சரியாச்சொன்னே,
புதியமொழியும் சமையலும் சூப்பரா கத்துக்குவே சீக்கிரமா.. நடுவே இந்த பதிவையும் அப்பப்ப இற்றைப்படுத்திட்டே இரு..

நேசமித்ரன் said...

மெய் தொட்டு எழுதிய கவித்துவமான பதில்கள்

கோமதி அரசு said...

எது இல்லையாகினும் வாழ்தல் அவசியமாகிறது.//

உண்மையான அழகான பதில்கள்.

கோமதி அரசு said...

எது இல்லையாகினும் வாழ்தல் அவசியமாகிறது.//

உண்மையான அழகான பதில்கள்.