சாமங்களில் அவ்வப்போது
எனது அறையில்
உலவத் தொடங்கியிருக்கின்றது
ஒரு அணிலின் சத்தம்
அதற்கு நீளம் குறைந்திருக்கின்றது
உதடுகளை தின்றபடியே
ஏதேதோ பிதற்றியது
அசதியில் தூங்கி விட்டேன்
அல்லது மயக்கத்திலுமாகலாம்
விடியல் பொழுதில்
படுக்கையெங்கும் கோடுகள்
நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை
4 comments:
\\நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை //
நல்லா இருக்கு யாழினி..
நல்லா இருக்குங்க , அந்த கடைசி மூணு வரி
நிசப்தமாய் பூத்திருந்தது
நீ தந்துவிட்டுப்போன
முற்றத்து மல்லிகை //
இல்லாமலும்
ம்ம்ம்ம் # மல்லிகை வாசம் வீசட்டும்
சரியாக புரியவில்லை.இருப்பினும் படிக்க மிகவும் நன்றாக உள்ளது
Post a Comment