Wednesday, February 10, 2010

ப்ராப்தம்

மூங்கில்
இடுக்கினூடே
பற்றிப் பிடித்த கரையான்
அசுவாரசியமற்று
பணித்த பாதையிலேயே
திரும்புகிறது
அரித்துப்பிளந்த
அம்மூங்கில்
மெல்ல முறிய
குற்றமற்றதொரு
மரணம் நிகழ்கிறது

3 comments:

அகநாழிகை said...

கவிதை அழகியலோட இருக்கு. ஆனா இன்னும்கூட எழுதியிருக்கலாம் அப்படின்னு தோணுது.

ஆயில்யன் said...

ஃபீலிங்க்ஸே இல்லாம கரையான் ரிடர்ன் வந்துடுச்சு, ஆனா பயங்கர ஃபீலிங்ஸோட கட்டையில போவுது மூங்கில் - ம்ம் கவிஞர்களுக்குள் உள்ள ரசிப்புதன்மை தான் எனக்கு இப்படி ஃபீல் பண்ண வைக்கிது :)

Anonymous said...

வித்தியாசமா யோசிக்கிறீங்க.. ஆனாலும் அற்புத விவரிப்பு உங்கள் வரிகளில் :-)