புழு தின்ற இலையில்
விடுபட்ட பாகம்
சிறகாகி வட்டமிடும்
வெளியெங்கும்
ஊருக்கு ஒதுக்குபுறம்
கடத்தப்பட்ட
காலம் கடந்துபோன வீடு
எச்சத்தில்
விழுந்த தானியம்
உலைக்குள் உருகி
பிழைத்தது பசியற்ற
வற்றுகளாய்
பொய்த்திருக்கும் புதர்களுக்குள்
விபச்சாரிகளின்
அழுகையில்லாத மௌனம்
மறுபடியும் விதைக்கப்படுகின்றது
குதிருக்குள்
ஊர் செய்ய...
4 comments:
"புழு தின்ற இலையில்
விடுபட்ட பாகம்
சிறகாகி வட்டமிடும்.."
மிக அழகான சொற்களைத் தேர்ந்து கோத்திருக்கிறீர்கள்.
அருமையான கவிதை!
”எச்சத்தில் விழுந்த தானியம்”
பறவைக்குத் தெரியவில்லையோ?
“பிழைத்தது பசியற்ற வற்றுகளாய்”
இலையில் பெரும்பகுதி சோக இழை!!
கிரகப்பிரவேசம் - அருமையான தலைப்பு.
////எச்சத்தில்
விழுந்த தானியம்
உலைக்குள் உருகி
பிழைத்தது பசியற்ற
வற்றுகளாய்
பொய்த்திருக்கும் புதர்களுக்குள்
விபச்சாரிகளின்
அழுகையில்லாத மௌனம்
மறுபடியும் விதைக்கப்படுகின்றது
குதிருக்குள்
ஊர் செய்ய...////
என்ன வரிகள், வாவ். அருமைன்னு ஒத்த வார்த்தையில் சொல்லிட்டு போக முடியலை.
இதுவும் நல்லாத்தான் இருக்கு தொடர்ந்து
எழுதுங்கள்
Post a Comment