அந்தரத்தில்
பாதை கோர்த்து
பயணித்திருந்த
சிலந்தியின்
கிளைகள்
உந்தி உயர்ந்து
கனவுகளை
ஆழக்கருமைகளாக்கி
தரை இறக்கியது
இலைகள்
இறகுகள்
இதயங்கள்
உறவுகளோடு
உணவு கண்ட
ஈக்களும் மொய்க்கும்
வனமெங்கும் இல்லை மரம்
ஒன்றுமற்ற பொழுதாகினும்
உறுத்துகிறது உன் வருகை.
4 comments:
துயரம் சுமக்க வைக்கும் வருகை ...
மரம் ஒன்றுமற்ற பொழுதாகினும்உறுத்துகிறது உன் வருகை
ம்ம் வதைதான்
:(
நல்லாருக்குங்க.
"உணவு கண்ட
ஈக்களும் மொய்க்கும்"
ஈக்களாய்ப் பார்க்காதீங்க...
”வனமெங்கும் இல்லை மரம்”
ஒண்ணோ ரெண்டோ இருக்கலாம் இல்லைன்னா கவிதை மழை வராது ;)
”உறுத்துகிறது உன் வருகை.”
எனக்கும் தாங்க...
Post a Comment