Thursday, January 28, 2010

வெறுமை

வீதி வீதியாய்
அலைக்கழிகின்ற
தீரவியலா துன்பத்தின்
நெரிசலில்
சிக்குண்டு விடுபட்ட
மாமிசச்சிலையின் பசி
சில பருக்கைகளில்
தீர்ந்திருக்கும்
தன் வசமிழந்து
பொழிகின்ற மழையின்
தீண்டலில்
உதறி எழுகின்ற
விளைச்சலென
விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்
அதன் உக்கிரத்தை
தூவி இருந்தது
முகம் சுளித்து
பற்றில்லாமல்
பயந்து நகர்கின்ற
பருவ பெண்களையோ
கடை முன் கையேந்தும்
பசியையும்
மதுரங்களில் படபடக்கும்
ஈயையோ
ஒரு சேர விரட்டும்
கைகளுக்கோ
மீந்த உணவு
சிறு பாலிதீன்
பைகளில் திணித்து
தருகின்ற
இரக்க மனதுகளுக்கோ
அவள் இளைத்திருக்கவே இல்லை
வழியெங்கும்
விரிந்து கிடக்கிறது
அவளுக்கான பிரயாணம்..

9 comments:

குடந்தை அன்புமணி said...

நல்லா இருக்குங்க... வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

நல்ல வெளிப்பாடு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு யாழினி கடைசி வரிகள் மிகவும் பிடித்தது.

மாதேவி said...

"விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்
அதன் உக்கிரத்தை
தூவி இருந்தது"

மனத்தைத் தொடுகிறது.

sathishsangkavi.blogspot.com said...

//இரக்க மனதுகளுக்கோ
அவள் இளைத்திருக்கவே இல்லை
வழியெங்கும்
விரிந்து கிடக்கிறது
அவளுக்கான பிரயாணம்..//

நல்லா இருக்குங்க...

அருள்மொழியன் said...

முதல் முறை உங்கள் பதிவை படிக்கிறேன்
பதிவின் கருபொருளை மனதில் பதிய வைத்துவிட்டீர்கள்

வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு.

/////பொழிகின்ற மழையின்
தீண்டலில்
உதறி எழுகின்ற
விளைச்சலென
விண்ணையும்
முட்டும்
சோக விருஷ்டம்/////

நல்லா வந்திருக்கு

நட்புடன் ஜமால் said...

வலிகள் வரிகளில்

Sakthi said...

பசியையும்
மதுரங்களில் படபடக்கும்
ஈயையோ
ஒரு சேர விரட்டும்
கைகளுக்கோ
மீந்த உணவு
சிறு பாலிதீன்
பைகளில் திணித்து
தருகின்ற
இரக்க மனதுகளுக்கோ//


andru thaniyum nam adimayin mogam..? baarathi kettathu ithayum thaan pola...