துழாவிக்களைத்த நீர் அலைகள்
அமைதியிழந்து தழைக்கிறது
அத்துமீறி என் தோட்டத்து வேரில்
இழைய தொடரும் காலமெனினும்
துரதிர்ஷ்ட சொல்லொன்றுக்கு கீழ்
முளைத்து நெளிந்த பாம்பின் கால்கள்..
அனுமதிக்கப்பட்ட பரமபதத்தை
வழிமறித்து. தனித்து நிற்கிறது
சுருக்கமற்ற நமது பிரியங்கள்
யாருமற்றதாய் புலம்பும் இன்மைகள்
பேரளவானதொரு தூரத்தை
நெருங்குகிறது
அண்மையில் இருப்பதறியாது
அமைதியிழந்து தழைக்கிறது
அத்துமீறி என் தோட்டத்து வேரில்
இழைய தொடரும் காலமெனினும்
துரதிர்ஷ்ட சொல்லொன்றுக்கு கீழ்
முளைத்து நெளிந்த பாம்பின் கால்கள்..
அனுமதிக்கப்பட்ட பரமபதத்தை
வழிமறித்து. தனித்து நிற்கிறது
சுருக்கமற்ற நமது பிரியங்கள்
யாருமற்றதாய் புலம்பும் இன்மைகள்
பேரளவானதொரு தூரத்தை
நெருங்குகிறது
அண்மையில் இருப்பதறியாது