Saturday, February 6, 2010

தொடர்வினை

தொடர்ந்திருந்த நெடுந்துயரத்தை
வெகுநாளாய் மறந்திருக்கிறேன்
என்பது நினைவில் வர
தணல் தரை நோக்கி
சாடித் தெறித்தவைகள்
ஒழுங்கற்று பரவத் தொடங்கியதும்
விளிம்புகளுக்கப்பால்
நேசிக்கப்படவிருந்த
இதயத்தினின்று வலிகள்
தன்னை தளர்த்தி
விலகியிருக்க
அதற்கான கூடொன்றை
நிர்ணைத்த மரமொன்று
அழுத்தம் கூட்டி
ஆகச்சிறு கல்லறைக்குள்
நசுக்கிப் போட்டதில்
இற்று துண்டாகி விழுந்த
சதைத் துணுக்குகள்
வலியையோ
பசியையோ உணராது
முழுவதுமாய் ஜீவனற்ற
அவ்வாழ்வின் பொருள் தேடி
அலைகிறது
மதபோதகனின் சொற்களைப்போல
அந்தரத்தில்..

5 comments:

அகநாழிகை said...

இந்த கவிதை நல்லாயிருக்கு.

/தெரித்தவைகள்/

‘தெறித்தவைகள்‘ என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

யாழினி said...

மாத்திட்டேன். :)

கார்க்கிபவா said...

இன்னும் எளிமையாகவும் கவிதை இருந்திருக்கலாம்.

நல்லா தான் இருக்கு :))

யாத்ரா said...

//அதற்கான கூடொன்றை
நினைத்த மரமொன்று
அழுத்தம் கூட்டி
ஆகச்சிறு கல்லறைக்குள்
நசுக்கிப் போட்டதில்
இற்று துண்டாகி விழுந்த
சதைத் துணுக்குகள்//

கவிதை ரொம்ப பாதிக்கிறது யாழினி.

//விளிம்புகளுக்கப்பால்
நேசிக்கப்படவிருந்த
இதயத்தினின்று வலிகள்
தன்னை தளர்த்தி
விலகியிருக்க//

இந்த வரிகளும்,,,,,,,,,,,,,,,

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here