வெகுநீண்டகாலமாய்
கண்கள் முட்டுவதும்
காதல் பேசுவதும்
கருத்துக்கள் மோதுவதும்
பெரும் சத்தங்களோடு
கலைந்து போவதுமாய்
இந்த மேகங்கள்
நிலம் நனைத்த
துளிகளுக்குள்
என் விழிநீர் சிலதுமிருக்கும்
அவைகளில் கொஞ்சம்
விளை நிலமொன்றுக்குள்
விழுந்திருக்கலாம்
இரு நெல்மணிக்கதிர்களாகவோ
பாகையாகவோ
அல்லது பழங்களாகவோ
பதமில்லாது முளைத்திருக்கலாம்
உணர்வுச்செத்த தருணமொன்றில்
உன் புணர்வு ஒருபோதும்
நேசத்தை சொல்லியிருக்கவேயில்லை
மற்றுமொரு மழை
வரக்காத்திருகிறேன்
மெல்ல
விரல்கள் நீண்டு
நீர்க்கோடுகளாய்
எலும்புகள் உடைந்து
ரத்தம் நிறமாறி
வியர்வை துவாரங்களில்
கசிகிறது நீரென
அடைக்கப்படாத
நீர்ப்பையென தளர்ந்து
தரையெங்கும் விரிந்து
பலமாய் பெய்தோய்கிறேன் பெருமொரு மழையாய்.
14 comments:
தோட்டத்தில் நல்ல மழையும் பல மகிழ்ச்சி கவிதைகள் பூக்கவும் வாழ்த்துகிறேன்.
உனக்குள்ள இவ்வளவு திறமைகளை ஒழிச்சி வச்சிகிட்டா இவ்ளோ நாள் சும்மா இருந்த!?
ரொம்ப நல்லா இருக்கு நீ இவ்ளோ நல்லா எழுதுவியா?! சொல்லவே இல்லே...அதுக்கு தேவை தொடர்ந்து எழுதுறதுதான் சிறந்த பயிற்சி...தொடர்ந்து எழுது..வாழ்த்துக்கள்...
//நிலம் நனைத்த
துளிகளுக்குள்
என் விழிநீர் சிலதுமிருக்கும்//
/அடைக்கப்படாத
நீர்ப்பையென தளர்ந்து
தரையெங்கும் விரிந்து
பலமாய் பெய்தோய்கிறேன் பெருமொரு மழையாய். //
அசத்தல் வரிகள்..வாழ்த்துக்கள் யாழினி !!!
கவிதை நன்றாகவுள்ளது..
எங்கே இருந்தீங்க இவ்ளோ நாளா?.
முத்துக்கா உங்க வாழ்த்துதான்
முதல் வாழ்த்து சந்தோஷமா இருக்குக்கா..
நன்றி அருண்
விக்கி...
நிஜமாவா சொல்றிங்க....
நன்றி உங்க வாழ்த்துக்கு
நன்றி பூங்குன்றன்
நன்றி முனைவர். இரா.குணசீலன் அவர்களே
நன்றி S.A. நவாஸுதீன் உங்க வாழ்த்துக்கு...
வாவ்.....இதான் பெஸ்ட்....வாழ்த்துகள்....
//நிலம் நனைத்த
துளிகளுக்குள்
என் விழிநீர் சிலதுமிருக்கும்
அவைகளில் கொஞ்சம்
விளை நிலமொன்றுக்குள்
விழுந்திருக்கலாம்
இரு நெல்மணிக்கதிர்களாகவோ
பாகையாகவோ
அல்லது பழங்களாகவோ
பதமில்லாது முளைத்திருக்கலாம்//
அருமை அருமை
இவ்ளோ நல்லா எழுதறீங்க, ஏன் இவ்ளோ நாள் எழுதாம இருந்தீங்க
Post a Comment