Thursday, December 10, 2009

முறிதற்காலம்

வார்த்தைச்சுருக்கமொன்றில்
வைத்துவிடத் தவறிய முற்றுப்புள்ளி
முற்றத்தில் கிடக்கிறது
ஆடு வெட்டிக் கூடிக்கும்பிட
அடர்த்தி கூடிய
அமாவாசை இருட்டை
தேடி சொல்லிற்று

வந்து சேர வழியறியாது
வராது போனவர்கள் இன்னும்
வந்து சேர்ந்திந்திருக்கவேயில்லை
வழிநெடுக கால் இடறி
காயாத உதிரக்கறைகள்
கற்களில் இன்னும் உறைந்தபடியே

வெறிச்சோட்டம் பாய்கின்ற தனித்திருப்பில்
அதிர்ந்தெழுந்த நாட்கள்
பொட்டு வைத்து
வெட்டப்பட காத்திருக்கும்
வெள்ளாடென
கட்டிக்கிடக்கிறத
காணவில்லை
முற்றுப்புள்ளியை

4 comments:

பூங்குன்றன்.வே said...

//முறிதற்காலம்//

தலைப்பே அழகா இருக்கு.

//வார்த்தைச்சுருக்கமொன்றில்
வைத்துவிடத் தவறிய முற்றுப்புள்ளி
முற்றத்தில் கிடக்கிறது//

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு யாழினி.

பூங்குன்றன்.வே said...

//முறிதற்காலம்//

தலைப்பே அழகா இருக்கு.

//வார்த்தைச்சுருக்கமொன்றில்
வைத்துவிடத் தவறிய முற்றுப்புள்ளி
முற்றத்தில் கிடக்கிறது//

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு யாழினி.

"உழவன்" "Uzhavan" said...

புரியலனு சொன்னா திட்டுவீங்களா? :-)

டவுசர் பாண்டி... said...

யார் மேல இம்புட்டு கோவம் !