Saturday, December 12, 2009

தொடர் குறிப்புகள் - 1

பிரியங்களினால்
தட்டப்பட்டிராத
எனது அறைக்குள்
அத்து மீறி நுழைகிறது மழை
அவன்வீட்டிலும்
அதுவாகவே நுழைந்திருக்கும்
மணல்மேட்டுத் துவாரங்களில்
கைக்கோர்த்து சிரித்த
காதல் தினத்தை மீண்டுமொரு
கோபுரமாக்கி இருக்கும்
இன்று நான் சாவகாசமாய்
நனைய முடியாத இந்த மழை

8 comments:

பூங்குன்றன்.வே said...

/மணல்மேட்டுத் துவாரங்களில்
கைக்கோர்த்து சிரித்த
காதல் தினத்தை மீண்டுமொரு
கோபுரமாக்கி இருக்கும்
இன்று நான் சாவகாசமாய்
நனைய முடியாத இந்த மழை //

மன உணர்வை வார்த்தைகள் மூலம் அழகிய கவிதையாக்கி உள்ளதற்கு பாராட்டும்,வாழ்த்தும் யாழி.

நேசமித்ரன் said...

கவிதை வலிந்து எழுதப்பட்டதாக தெரிகிறது .குறைப் பிரசவம் போலவும்

வால்பையன் said...

மெனக்கெட வேண்டாம், அதுவா வரட்டும்!

டவுசர் பாண்டி... said...

எதுக்கு மெனக்கெடனும்..

பாலா said...

பின் தொடரவே முடியாதா எப்போதுமே ????????????????
பின் தொடர வழிவகை செய்யவும் (பிளோகில் மட்டும்) :))))

விஜய் said...

கவிதை அழகு (முகப்பு படமும்)

வாழ்த்துக்கள்

விஜய்

Ganesh Gopalasubramanian said...

வலைப்பூவிற்கு follow gadgetஐ இணையுங்கள்.

Ganesh Gopalasubramanian said...

கவிதைகளின் அழகு வருத்தம் தோய்ந்த வரிகளாக வெளிப்படுகின்றன. ஆழ எழுதும் திறன்களில்ப் பாதியை வருத்தங்களினூடே சேமித்து வைத்திருக்கிறீர்கள் போல. பீறிட்டெழும் வார்த்தைகளிலில் படிந்திருக்கும் அந்த பாசிகளின் வழப்பமே உங்கள் கவிதைகளின் பலம் என்று நினைக்கிறேன்.

ஒரே ஒரு பின்குறிப்பு: மிக்க அழுதாலும் மூச்சு முட்டி தலைவலிக்கும்.